sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சாலை  பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

/

 சாலை  பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

 சாலை  பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

 சாலை  பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்


ADDED : பிப் 04, 2026 06:35 AM

Google News

ADDED : பிப் 04, 2026 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அரசரடி தேவகி மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இயக்குநர் டாக்டர் நாகேந்திரன் வரவேற்றார். இந்திய மருத்துவ சங்கச் செயலாளர் டாக்டர் அமானுல்லா பேசுகையில், 'சாலை விபத்தால் ஒரு உயிர் கூடபலியாகக்கூடாது என்பதில் மக்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்' என்றார்.

திலகர் திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி பேசுகையில், 'மனிதன் உயிரோடு இருக்க தலையும், மூளையும் தான் காரணம்.

தலையை காக்க தலைக்கவசத்தை அணிய வேண்டும். சிக்கலான பல விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை இம்மருத்துவமனை டாக்டர்கள் உடனுக்குடன் செயல்பட்டு காப்பாற்றி உள்ளனர்' என்றார். டாக்டர்கள் ரமேஷ், ஜெய்பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு பரிசு, இனிப்பு வழங்கப்பட்டது. எஸ்.ஐ., சந்தனகுமார், போலீசார் ஜெகதீஷ், கருப்பையா, பிரேம் குமார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us