/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 15, 2024 05:53 AM

மதுரை: மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) தீ மற்றும் தொழிற்சாலை பாதுகாப்புத் துறை, ஹெர்பெர்ட் வில்லியம் ஹெயின்ரிச் சேப்டி அசோசியேஷன் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். ஆங்கிலத் துறை பேராசிரியர் அஜய்குமார் வரவேற்றார். துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா பேசினர். மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சித்ரா பேசுகையில், இன்றைய உலகில் போக்குவரத்து ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது. சாலையில் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்றார்.
நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் வரலட்சுமி, சாலை விதிகள், விழிப்புணர்வு குறும்படங்கள், தகவல்களை மாணவர்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். கணினித்துறை மாணவர்கள் மவுன மொழி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துறைத் தலைவர் விவேக்ராம்குமார் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்தனர். மாணவர் ஸர்மன்குமார் நன்றி கூறினார்.