ADDED : ஜன 21, 2026 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை புதுார் அல்அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துணை கமிஷனர் வனிதா தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், எஸ்.ஐ.,க் கள் விஸ்வநாதன், அழகர்சாமி பங்கேற்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கினர். மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மாவட்ட தமிழியக்க செயலாளர் பழனிச்சாமி, உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகிர்உசேன், அல்ஹாஜ் முகமது, நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர் யூசுப், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

