ADDED : ஜூலை 08, 2026 04:09 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை யாதவர் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு குறும்படம் திரையிடப்பட்டது. கே.பி.எஸ். கண்ணன் தொடங்கி வைத்தார். முதல்வர் ராஜூ தலைமை வகித்தார்.
தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணன், துணை முதல்வர் கிருஷ்ணவேணி, இயக்குநர் ராஜகோபால் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து பேசினர். பேராசிரியை கலைவாணி உள்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி சாலை பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்தது. மாணவி பூஜாஸ்ரீ நன்றி கூறினார்.
