/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாலை பாதுகாப்பு வாரவிழா முன்னேற்பாடு ஆலோசனை
/
சாலை பாதுகாப்பு வாரவிழா முன்னேற்பாடு ஆலோசனை
ADDED : ஜன 08, 2024 05:12 AM
மதுரை : மதுரையில் மத்திய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம், மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து போலீஸ், வட்டார போக்குவரத்து, நேரு யுவகேந்திரா சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருவார விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் டி.ஆர்.ஓ., சக்திவேல், போலீஸ் துணை கமிஷனர் குமார் தலைமையில் நடந்தது.
இதில் எடுத்த முடிவுகள்: இன்று (ஜன.,8) மதுரை காந்தி என்.எம்.ஆர்., கல்லுாரி ,தமிழ்நாடு பாரா மெடிக்கல் கல்லுாரி சார்பில் ஜன.9ல் யாதவா ஆண்கள் கல்லுாரி, லேடி டோக் கல்லுாரி, 10ல் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, அம்பிகா கல்லுாரியில் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. ஜன.,11 முதல் 18 வரை இக்கல்லுாரி மாணவர்களும் இணைந்து போக்குவரத்தை சரிசெய்யும் போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவர்.
இதற்கான ஏற்பாடுகளை போலீசாருடன் இளைஞர் நல இணை இயக்குநர் செந்தில்குமார் இணைந்து செய்து வருகிறார். கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிங்காரவேலு, சித்ரா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன், மாநகராட்சி பொறியாளர் மாலதி, கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர்.