/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலையுங்கள் நெடுஞ்சாலை ஆணையத்தை சாலைப் பணியாளர்கள் வலியுறுத்தல்
/
கலையுங்கள் நெடுஞ்சாலை ஆணையத்தை சாலைப் பணியாளர்கள் வலியுறுத்தல்
கலையுங்கள் நெடுஞ்சாலை ஆணையத்தை சாலைப் பணியாளர்கள் வலியுறுத்தல்
கலையுங்கள் நெடுஞ்சாலை ஆணையத்தை சாலைப் பணியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 31, 2025 05:00 AM
மதுரை: மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும் என மதுரை சாலைப் பணியாளர் மாநாட்டில் வலியுறுத்தினர்.
மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் வட்டக்கிளை மாநாடு நடந்தது. கிளைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தைகலைக்க வேண்டும். உயிர்நீத்த பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை பணிநியமனம் வழங்க வேண்டும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட்டக்கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளார் செந்தில்பாண்டியன் வரவுசெலவு அறிக்கை சமர்ப்பித்தார்.மாநில பொருளாளர் தமிழ், மாவட்ட தலைவர் மணிமாறன், செயலாளர் மனோகரன், பொருளாளர் மூர்த்தி, கிளை துணைத்தலைவர் சுப்பையா, செயலாளர் அழகேந்திரன் பேசினர். அரசு ஊழியர் சங்க நிர்வாகி சுஜாதா, பொருளாளர் பிரதீப், மகளிர் அமைப்பாளர் ரம்யா, ஓய்வுபெற்றோர் சங்க தலைவர் ஆதரமிளகி, சோலையப்பன் பங்கேற்றனர். இணைச்செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.