நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி தற்காலிக துாய்மை பணியாளர்கள் நாகரத்தினம், ஈஸ்வரி நேற்று முன்தினம் திருமங்கலத்தில் டூவீலரில் 'லிப்ட்' கேட்டு சென்ற போது லாரி மோதி இறந்தனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்ககோரி உறவினர்கள் நேற்று காலை திருமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு ரோடு மறியலில் ஈடுபட்டனர். 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. கமிஷனர் அசோக்குமார் சமரசம் செய்தார்.