நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : மதுரை அவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. 60 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை.
கழிவுநீர் வாய்க்கால்கள் துார்வாரப்படாமல் கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது. தெருவிளக்குகள் எரியவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை ஒரு மணி நேரம் வில்லாபுரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது.
போலீஸ் உதவி கமிஷனர் சீதாராமன், இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி, மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வவிநாயகம் போக்குவரத்து துறையினர் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

