நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; தெற்குதெருவில் 300க்கும் மேற்பட்டோர் ஒரே தொழிற்கூடத்தில் மண்பாண்ட தொழில் செய்கின்றனர்.
இத்தொழில் கூடத்திற்கு கூரை இல்லாமல் வெயில், மழையில் சிரமப்பட்டனர். அதனால் தெற்கு தெரு சமூக ஆர்வலர் சரவணகுமார் டி.வி.எஸ்., சக்ரா லிட்., நிர்வாகத்தை சேர்ந்த ஆரோக்கிய நலவாழ்வு அறக்கட்டளையை தொடர்பு கொண்டார். அதன் பெயரில் அறக்கட்டளை நிர்வாகி முத்துராமன் ரூ. 2.22 லட்சத்தில் கூரை அமைத்துக் கொடுத்தார்.

