ADDED : அக் 02, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் நேற்று உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு சுந்தராஜபுரம், ஜெய்ஹிந்த்புரம் பத்மாலயா மெடிக்கல் செண்டரில் உள்ள ரோட்டரி ரத்த வங்கிக்காக ரத்ததான முகாம் நடந்தது.ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி தலைமை வகித்தார்.
சேர்மன் ராஜேஷ் கண்ணா, ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், டாக்டர் குருசுந்தர், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 70க்கும் மேற்பட்டோரிடம் ரத்த தானம் பெறப்பட்டது.