ரோட்டோரம் எரிக்கப்படும் குப்பை: பேரூராட்சி சரிசெய்யுமா
ரோட்டோரம் எரிக்கப்படும் குப்பை: பேரூராட்சி சரிசெய்யுமா
UPDATED : நவ 16, 2026 05:39 PM
ADDED : நவ 16, 2026 05:36 PM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை கிடங்குக்கு கொண்டு செல்லாமல் ரோட்டோரம் குவித்து தீ வைத்து எரிக்கும் அவலம் நிலவுகிறது.
துாய்மை பணியாளர்கள் சேகரித்த குப்பையை கால்நடை மருத்துவமனை அருகே ரோட்டோரம் குவித்து தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் உண்டாகும் புகை வாகன ஓட்டிகளின் கண்களில் எரிச்சலை உண்டாக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எரியூட்டும் தீ அப்பகுதியில் பரவி வேறு விபரீதங்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அடிக்கடி மருத்துவ கழிவுகளும் திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மருந்து பொருட்கள் எரிக்கப்படுவதால் ஏற்படும் நெடி பொதுமக்களுக்கு, சுவாச பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
'குப்பைக் கிடங்கில் குப்பையை கொட்டாமல், இங்கு எரிப்பது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். துாய்மை பணியாளரிடம் கேட்டால் அலட்சியமாக பதிலளிக்கின்றனர் , பேரூராட்சியினரிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை. மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
