/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோட்டில் கிடந்த ரூ.17.50 லட்சம் வருமானவரித்துறையிடம் ஒப்படைப்பு
/
ரோட்டில் கிடந்த ரூ.17.50 லட்சம் வருமானவரித்துறையிடம் ஒப்படைப்பு
ரோட்டில் கிடந்த ரூ.17.50 லட்சம் வருமானவரித்துறையிடம் ஒப்படைப்பு
ரோட்டில் கிடந்த ரூ.17.50 லட்சம் வருமானவரித்துறையிடம் ஒப்படைப்பு
ADDED : அக் 28, 2025 11:37 PM
மதுரை: மதுரையில் ரோட்டில் கிடந்த ரூ.17.50 லட்சத்தை வருமான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைந்தனர்.
மதுரை சிம்மக்கல் திருமலைராயர் படித்துறையை சேர்ந்தவர் செல்வராணி. இவர் மீனாட்சி பார்க் - கீழஆவணி மூலவீதியில் இரு நாட்களுக்கு முன் நடந்து சென்றபோது அப்பகுதியில் சென்ற வாகனம் ஒன்றில் இருந்து சாக்குமூடை விழுந்ததை கண்டு எடுத்தார். அதில் 500 ரூபா ய் நோட்டுக்கட்டுகள் ரூ.17.49 லட்சம் வரை இருந்தது. அதை விளக்குத்துாண் போலீசில் அவர் ஒப்படைத்தார்.
அப்பணம் குறித்து விளக்குத்துாண் போலீசார் விசாரித்தனர். அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே பழைய பேட்டரிகளை வாங்கி விற்கும் மகேஷ் என்பவர் அந்த பணத்திற்கு உரிமை கோரினார்.
வசூல் பணத்தை ஆட்டோவில் கொண்டு சென்றபோது தவறி விழுந்ததாக கூறி, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார். ஆனால் போலீசார் சம்பந்தப்பட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
மகேஷ் அளித்துள்ள ஆவணங்கள் சரியாக இருந்தால் அப்பணத்தை வருமான வரித்துறையினர் அவரிடம் ஒப்படைப்பர் என போலீசார் தெரிவித்தனர்.