தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கழிப்பிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

கழிப்பிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

கழிப்பிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


UPDATED : நவ 07, 2026 10:10 PM

ADDED : நவ 07, 2026 06:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 10:10 PM ADDED : நவ 07, 2026 06:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாநகராட்சியில் பராமரிக்கப்படாத கழிப்பிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கமிஷனர் கவுரவ் குமார் உத்தரவிட்டார்.

தீபாவளியை முன்னிட்டு இன்று (நவ.,7) மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் பண்டிகை முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். பொதுக் கழிப்பிடங்களை ஆய்வு செய்து செயல்பாட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். முறையாகப் பராமரிக்கப்படாத கழிப்பிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மீனாட்சி பூங்கா நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பதிவேடுகளை சரிபார்த்தார். தற்காலிக சாலையோர வியாபாரிகளிடம் இடையூறு இல்லாத வகையில் கடைகளை அமைக்க அறிவுறுத்தினார்.

ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us