UPDATED : நவ 08, 2026 12:17 AM
ADDED : நவ 07, 2026 11:24 PM

மதுரை: மதுரை மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளில் மாணவ, மாணவிகள் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
மகளிர் 200 மீட்டர் ஐ.எம்.பிரிவு போட்டி முடிவுகள்:
குரூப் 1 பிரிவில் ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சி பள்ளி பூர்வஜா முதலிடம், குரூப் 2 பிரிவில் ஜெயின் வித்யாலயா ஏத்தனா ரேச்சல் முதலிடம், வேலம்மாள் வித்யாலயா நட்சத்திரா இரண்டாமிடம், கேந்திரிய வித்யாலயா தாரணி மூன்றாமிடம் பெற்றனர். குரூப் 3 ல் கேந்திரிய வித்யாலயா சிவதாண்யா முதலிடம், தான்யஸ்ரீ இரண்டாமிடம், எஸ்.டி.ஏ.டி., மிருதுல்லா மூன்றாமிடம் பெற்றனர். குரூப் 4 பிரிவில் மகாத்மா பள்ளி அல் ஆலியா முதலிடம், சுப தக்ஷனா இரண்டாமிடம், ஜெயின் வித்யாலயா நைஸ்யா சிங் மூன்றாமிடம் பெற்றனர்.
குரூப் 5 க்கான 100 மீட்டர் ஐ.எம். பிரிவில் கல்வி பள்ளி மோஷிகா முதலிடம், சைதன்யா டெக்னோ பள்ளி பிரணவி பூமிகா இரண்டாமிடம், ரோஸ் பள்ளி நேத்ரா மூன்றாமிடம் பெற்றனர். குரூப் 6 பிரிவில் விமல் வித்யாலயா மஹதி முதலிடம், மகாத்மா மாண்டிசோரி ரக்ஷிதா இரண்டாமிடம், ஜெயின் பள்ளி தியா மூன்றாமிடம் பெற்றனர்.
குரூப் 2 க்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் திரிவேணி பள்ளி பாலதீபிகா முதலிடம், இளநிலா இரண்டாமிடம், ஸ்ரீராம் நல்லமணி பள்ளி முத்துமாரி மூன்றாமிடம் பெற்றனர். 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் ஜெயின் வித்யாலயா ஏத்தனா ரேச்சல் முதலிடம், வேலம்மாள் வித்யாலயா நட்ஷத்திரா இரண்டாமிடம், ஸ்ரீராம் பள்ளி ஜேடன் பியூலா ராணி மூன்றாமிடம் பெற்றனர். பட்டர்பிளை பிரிவில் பாலதீபிகா முதலிடம், கே.வி.பள்ளி தாரணி இரண்டாமிடம், ஜேடன் பியூலா ராணி மூன்றாமிடம் பெற்றனர். ப்ரீஸ்டைல் போட்டியில் ஏத்தனா ரேச்சல் முதலிடம், இளநிலா இரண்டாமிடம், தாரணி மூன்றாமிடம் பெற்றனர்.
குரூப் 3 க்கான 100 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் சிவதாண்யா முதலிடம், எஸ்.டி.ஏ.டி., மிருதுளா இரண்டாமிடம், ஓ.சி.பி.எம்., பள்ளி லகிதா மணி மூன்றாமிடம் பெற்றனர். குரூப் 4 பிரிவில் அல் ஆலியா முதலிடம், சுபதக்ஷனா இரண்டாமிடம், பிரகாஷினி மூன்றாமிடம் பெற்றனர்.
குரூப் 1 க்கான 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் ஈ.வெ.ரா., பள்ளி பூர்வஜா முதலிடம் பெற்றார். குரூப் 2 பிரிவில் பாலதீபிகா முதலிடம், இளநிலா மூன்றாமிடம், கே.வி. பள்ளி ஹரிணி மூன்றாமிடம் பெற்றனர். குரூப் 3 பிரிவில் தான்யஸ்ரீ முதலிடம், சிவதான்யா இரண்டாமிடம், லகிதா மணி மூன்றாமிடம் பெற்றனர்.
ஆடவர் குரூப் 1 க்கான 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் கவின் முதலிடம், ஜெயின் வித்யாலயா சாத்விக் இரண்டாமிடம், குரூப் 2 பிரிவில் ஹரிஹரன் முதலிடம், ஸ்ரீஹரன் இரண்டாமிடம், சிவபாலன் மூன்றாமிடம் பெற்றனர். குரூப் 3 பிரிவில் தியானேஷ் முதலிடம், ஷான் மாதுரன் இரண்டாமிடம், ஸ்ரீமுத்து மூன்றாமிடம் பெற்றனர்.
போட்டியின் முடிவில் 304 புள்ளிகள் பெற்ற ஜெயின் வித்யா பள்ளி இரண்டாம் இடம் பெற்றது. ஹேம கார்த்திகேயன், பூர்வஜா, ஹரிஹரன், பால தீபிகா, ஏத்தனா ரேச்சல், தியானேஷ், தான்யா ஸ்ரீ, சிவதான்யா, கேசவன், ஆலியா, ஆகாஷ் பாண்டியன், மோஷிக்கா, சாய் கிருத்திகன், மஹதி, ஜெய்வின் பிரகாஷ், தனிஷ்கா, முகமது ஆரிப், சமிஷ்கா, மந்திரினி ஆகியோர் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
