/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏர்போர்ட்டில் ரூ.3 கோடி கஞ்சா சிக்கியது
/
ஏர்போர்ட்டில் ரூ.3 கோடி கஞ்சா சிக்கியது
ADDED : ஜூன் 24, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: தாய்லாந்தில் இருந்து இலங்கை சென்று, அங்கிருந்து மதுரை வரும் விமானத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த விமானத்தில் வந்த பயணியரின் உடைமைகளை நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர்.
ஒரு பயணி கொண்டு வந்த பெட்டியில், 3 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு, 3 கோடி ரூபாய். கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர், கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரிடம் விசாரிக்கின்றனர்.