/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ. 180 கோடி மதிப்பு போதைப்பொருள் சென்னை டூ மதுரை கடத்தியவர் கைது குப்பையில் இருந்தும் கண்டெடுப்பு

ADDED : மார் 02, 2024 05:38 AM

மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரூ. 180 கோடி மதிப்பிலான போதைப்பொருளைக் கொண்டு வந்த சென்னை பிள்ளமன் பிரகாைஷ 42, மத்திய போதைப்பொருள் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் (பிப்.,29) இரவு சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிள்ளமன் பிரகாஷ் இரண்டு பைகளுடன் புறப்பட்டார். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் அதிகாரிகள் சோதனை செய்ததில் 10 பொட்டலங்களாக 15 கிலோ பவுடரும், 15 கிலோ திரவ வடிவிலான மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.
அதிகாரிகள் கூறியதாவது: விசாரணையில் சென்னையில் உள்ள வீட்டிலும் போதை பொருள் வைத்திருப்பதாக கூறினார். அங்கு அதிகாரிகள் செல்வதற்குள் குடும்பத்தினர் குப்பையில் போதை பொருளை வீசியது தெரிந்தது. குப்பையில் இருந்து 6 கிலோ எடை கொண்ட போதை பொருள் மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட மொத்த போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ. 180 கோடி. இதை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு யார் கொடுத்தார்கள் என விசாரித்து வருகிறோம் என்றனர்.