sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பாதுகாப்பு 'அப் கிரேடு' 'கவச்' தொழில் நுட்பத்துக்கு ரூ.110.78 கோடி 2 ஸ்டேஷன்களில் சிக்னலுக்கு ரூ.23.96 கோடி

/

 பாதுகாப்பு 'அப் கிரேடு' 'கவச்' தொழில் நுட்பத்துக்கு ரூ.110.78 கோடி 2 ஸ்டேஷன்களில் சிக்னலுக்கு ரூ.23.96 கோடி

 பாதுகாப்பு 'அப் கிரேடு' 'கவச்' தொழில் நுட்பத்துக்கு ரூ.110.78 கோடி 2 ஸ்டேஷன்களில் சிக்னலுக்கு ரூ.23.96 கோடி

 பாதுகாப்பு 'அப் கிரேடு' 'கவச்' தொழில் நுட்பத்துக்கு ரூ.110.78 கோடி 2 ஸ்டேஷன்களில் சிக்னலுக்கு ரூ.23.96 கோடி


ADDED : மார் 23, 2026 06:19 AM

Google News

ADDED : மார் 23, 2026 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை,:மதுரை ரயில்வே கோட்டத்தில் சிக்னல், பாதுகாப்பு மேம்பாட்டுக்காக ரூ.134.74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருச்சி - திருநெல்வேலி இடையே 'கவச்' தொழில்நுட்பம் அமைத்தல் கொடை ரோடு, அம்பாத்துரை ஸ்டேஷன்களில் சிக்னல்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்திய ரயில்வேயில் விபத்துகளை தடுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி பாதுகாப்பு தொழில்நுட்பம், 'கவச்'. ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதை தடுக்க, சிக்னலை மீறிச் சென்றால் ரயிலின் வேகத்தை தானாக குறைத்து நிறுத்த, மூடுபனியில் சிக்னலை தெளிவாக அறிய இத்தொழில்நுட்பம் உதவுகிறது.

மதுரை கோட்டத்தில் திருச்சி - திருநெல்வேலி இடையே 316 கி.மீ.,க்கு கவச் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு ரூ.110.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 'இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிக்னல் மேம்பாடு ரயில்வேயில் 'இன்டர்லாக்கிங்' என்பது சிக்னல்களுக்கும், தண்டவாளப் பாதையை மாற்றும் பாயின்டுகளுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் தொழில்நுட்பம். இதில் மனித தவறு தவிர்க்கப்படுகிறது.

பல ஸ்டேஷன்களில் 'ரூட்-ரிலே இன்டர்லாக்கிங்' அமைப்பு செயல்படுகிறது. இதில் ஸ்டேஷன் மாஸ்டர் ரயிலின் பாதையை தேர்வு செய்தால், அதில் உள்ள அனைத்து பாயின்டும் தானாகவே 'லாக்' ஆகிவிடும்.

இம்முறையில் நுாற்றுக்கணக்கான ரிலேக்கள் இணைக்கப்பட்டிருப்பதால் புதிய பாதை அல்லது பிளாட்பாரத்தை இணைக்க ரிலேக்கள் முழுவதையும் மாற்ற வேண்டும். பராமரிப்பு அதிகம். இதை தவிர்க்க 'எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்' முறைக்கு ரயில்வே நிர்வாகம் மாறிவருகிறது.

இது மென்பொருள் வாயிலாக இயங்குவதால் மாற்றங்கள் செய்வதும், பராமரிப்பதும் எளிது. மதுரைக் கோட்டத்தின் 97 ஸ்டேஷன்களில் 59ல் 'ரூட் ரிலே இன்டர்லாக்கிங்', 38 ல் 'எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்' முறை உள்ளது. தற்போது மதுரை - திண்டுக்கல் பிரிவில் கொடை ரோடு, அம்பாத்துரை ஸ்டேஷன் களின் சிக்னல்கள் ரூ.23.96 கோடியில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் முறைக்கு மாற்றப்படுகிறது.

'நமோ பாரத்' ரயில்


ரயில்வே திட்ட ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது:

சிக்னல் மேம்பாடு மூலம் அதிக ரயில்களை எளிதாக இயக்க முடியும். இரட்டை ரயில் பாதையில் மதுரை - விருதுநகர், திண்டுக்கல் - மதுரை தடம், ஒற்றை ரயில் பாதையில் மானாமதுரை - ராமேஸ்வரம் வழித்தடம் 75 சதவீதத்துக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளது. மதுரை - போடி, மதுரை - மானாமதுரை, திண்டுக்கல் - பழநி - பொள்ளாச்சி உட்பட பல தடங்கள் 50 சதவீதத்துக்கும் குறைவாக பயன்பாட்டில் உள்ளன.

இங்கு தண்டவாளம் இருந்தும் அது முழுபயன்பாட்டில் இல்லை. தானியங்கி சிக்னல்களாக மேம்படுத்தி துாத்துக்குடி, திருச்செந்துார், செங்கோட்டை, பொள்ளாச்சி, போடி, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு 'மெமு' அல்லது 'நமோ பாரத்' ரயில்களை இயக்கி தடத்தை முழுமையாக பயன்படுத்தலாம். சிக்னலுடன் இணைக்கப்படாத 107 'லெவல் கிராசிங்'குகளை இன்டர்லாக்கிங் ஆக மாற்றலாம் என்றார்.






      Dinamalar
      Follow us