/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வி.எம்.ஜே., பள்ளியில் எம்.யு.என்., கருத்தரங்கு
/
வி.எம்.ஜே., பள்ளியில் எம்.யு.என்., கருத்தரங்கு
ADDED : மார் 21, 2026 11:19 PM

மதுரை: மாணவர்களின் அறிவு பேச்சுத் திறன் மற்றும் சர்வதேச விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், பள்ளிகளுக்கு இடையேயான ஐ.நா., மாதிரி (எம்.யு.என்.,) கருத்தரங்கு, மதுரை விருதுநகர் மாணிக்கம் நாடார் ஜானகி அம்மாள் பள்ளியில் நடந்தது. இதில், இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட முக்கிய உலக நாடுகளின் தூதர்களாக, மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஈரான் - இஸ்ரேல் மோதல் மற்றும் அதனால் உலகளாவிய தாக்கங்கள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் பேர்ல் பிரேம்குமார், நூலகர் ரமாதேவி மாணவர்களை தயார் படுத்தினர். பள்ளியின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

