ADDED : பிப் 19, 2026 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், உபகோயில்களின் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. இணை கமிஷனர் சுரேஷ் தலைமை வகித்தார். கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் முன்னிலை வகித்தார்.
அறங்காவலர் குழுத் தலைவர், ஹிந்து அறநிலையத்துறை, வங்கி அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். இதில் பக்தர்கள் வழங்கிய ரொக்கம் ரூ. ஒரு கோடியே 21 லட்சத்து 79,094, தங்கம் 342 கிராம், வெள்ளி 308 கிராம், 270 வெளிநாடு ரூபாய் நோட்டுகள் காணிக்கையாக வழங்கியிருந்தது தெரியவந்தது.

