/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை
/
தி.மு.க., வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : பிப் 19, 2026 05:47 AM
மதுரை: மதுரை உத்தங்குடியில் தி.மு.க., வடக்கு மாவட்ட நிர்வாகிகள், அணிகள் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர்கள் ஆனந்த், கதிரவன், சம்பத் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் மூர்த்தி பேசுகையில், 'பிப்.,21ல் உத்தங்குடியில் நடக்கும் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு 10 மாவட்டங்களை சேர்ந்த 58 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த 1.25 லட்சம் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு தொகுதிவாரியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்காக 58 தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
கூட்டத்தில் கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கு சுபாஷ்சந்திரபோஸ் பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி, மாநில நிர்வாகிகள் தனச்செல்வம், நேருபாண்டியன், கணேசன், பொதுக் குழு உறுப்பினர்கள் முருகானந்தம், மனோகரன் பங்கேற்றனர்.

