/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாவட்டத்தில் ரூ.1.42 கோடி வேளாண் திட்டங்கள் அமல் 78 ஆயிரம் பேர் பயன்
/
மாவட்டத்தில் ரூ.1.42 கோடி வேளாண் திட்டங்கள் அமல் 78 ஆயிரம் பேர் பயன்
மாவட்டத்தில் ரூ.1.42 கோடி வேளாண் திட்டங்கள் அமல் 78 ஆயிரம் பேர் பயன்
மாவட்டத்தில் ரூ.1.42 கோடி வேளாண் திட்டங்கள் அமல் 78 ஆயிரம் பேர் பயன்
ADDED : பிப் 17, 2024 05:20 AM
மதுரை: வாடிப்பட்டி தாலுகா மேலக்காலில் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார். இணை இயக்குனர் சுப்புராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கலெக்டர் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில்இத்திட்டம் கடந்த 2 ஆண்டுகளில் 170 கிராமங்களில் ரூ.1.42 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் 78 ஆயிரத்து 33 பேர் பயன்பெற்றுள்ளனர். வேளாண் துறையின் பிற திட்டங்கள்மூலம் 14.99 கோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தோட்டக்கலைத் துறையில் ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு 34 ஆயிரத்து 313 பேர் பயனடைந்துள்ளனர்.இத்துறையின் பிற திட்டங்கள் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறையில் இத்திட்டம் மூலம் ரூ.5.59 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு 433 பேர் பயன்பெற்றுஉள்ளனர். பிற திட்டங்கள்மூலம் ரூ.3.14 கோடி மதிப்பில் பணிகள் நடந்துஉள்ளன.
மதுரையில் 2021 - 22 ல் 20 நிலத்தொகுப்புகள் உருவாக்கப்பட்டு வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்துளை கிணறு, இலவச மின் இணைப்பு, ஒரு சோலார் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 10 ஒன்றியங்களில் 18 கிராமங்களில் 26 நிலத்தொகுப்புகளும், நடப்பாண்டில் 85 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 6 நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.