ADDED : பிப் 11, 2026 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, நேற்று முன்தினம் மதுரைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், கஞ்சா கடத்தி வரப்படுவதாக, வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரி களுக்கு தகவல் வந்தது.
அந்த விமானத்தில், பாங்காக்கில் இருந்து மதுரை வந்த பயணியரின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அதில், சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 9.50 கிலோ கஞ்சாவை பிடித்தனர். அதன் மதிப்பு, 9.50 கோடி ரூபாய்.
இதை கடத்தி வந்த நபரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.

