ADDED : அக் 25, 2026 10:56 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் 100வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருமங்கலத்தில் இன்று (அக்.,25) அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே பாரதமாதா படத்தின் முன் காவிக்கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து ஸ்வயம் சேவகர்களின் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி பிரவீன் ஜே பட்டேல் கொடியசைத்து துவங்கி வைத்தார். ஊர்வலம் மதுரை ரோடு, உசிலம்பட்டி ரோடு, சந்தைப்பேட்டை வழியாக மீண்டும் ராஜாஜி சிலையை வந்தது. டி.எஸ்.பி., இமயவரம்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
