/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உண்டியல் விவகாரம் ஆர்.டி.ஓ., விசாரணை
/
உண்டியல் விவகாரம் ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : ஜூன் 01, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே அய்யனார்குளத்தில் கடசாரி நல்லகுரும்பன் கோயில் உண்டியலை உடைத்து சிலர் பணம் திருடியதோடு வெல்டு வைத்து அடைத்துள்ளதாக உத்தப்பநாயக்கனுார் போலீசில் வி.ஏ.ஓ., ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார். டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் அய்யனார்குளத்தைச் சேர்ந்தவர்களிடம் உண்டியல் பணத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் பக்கத்து கிராமத்தில் உள்ள கோயில் கும்பாபிஷேகத்திற்கு பணம் கொடுக்க உண்டியல் பணத்தை எடுத்ததாக தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் 'எந்த தகவலும் கொடுக்காமல் எடுத்தது தவறு' என்றனர். இருதரப்பினரிடமும் ஆர்.டி.ஓ., சண்முகவேல் விசாரித்து வருகிறார்.