ADDED : ஜன 31, 2025 07:25 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி; உசிலம்பட்டி கருக்கட்டான்பட்டி காலனி பகுதியில் பொது கழிப்பிடம் கட்டித்தரக்கோரி அப்பகுதி மக்கள் குடியரசு தினத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நேற்று முன்தினம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் பாலகிருஷ்ணன் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. கழிப்பிடம் கட்ட ஏற்ற இடத்தை நேரில் ஆய்வு செய்து விரைவில் பணி துவக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
