/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிதிலமடைந்த சிறுமேளம் கண்மாய்; அலட்சியம் காட்டும் நீர்வளத்துறை
/
சிதிலமடைந்த சிறுமேளம் கண்மாய்; அலட்சியம் காட்டும் நீர்வளத்துறை
சிதிலமடைந்த சிறுமேளம் கண்மாய்; அலட்சியம் காட்டும் நீர்வளத்துறை
சிதிலமடைந்த சிறுமேளம் கண்மாய்; அலட்சியம் காட்டும் நீர்வளத்துறை
ADDED : செப் 20, 2024 05:45 AM

மேலுார் : புதுசுக்காம்பட்டியில் சிறுமேளம் கண்மாய்க்கு தண்ணீர் கால்வாய் மற்றும் மடைகளை பழுது பார்க்க தீர்வளத்துறையினர் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இக்கண்மாய் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எட்டிமங்கலம் பிரதான கால்வாய் 4வது மடை வழியாக இரண்டு, ஆத்துக்கரைப்பட்டி வழியாக ஒரு மடை என மூன்று கால்வாய் வழியாக தண்ணீர் நிரம்பும். கண்மாயில் தண்ணீர் நிரம்பினால் நுாற்றுக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசனம் பெறும்.
இக் கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மூன்று மடைகளும் சிதிலம் அடைந்துள்ளதால் மராமத்து பார்க்க மறுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
விவசாயி பாண்டி: கண்மாய்க்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய்கள் முற்றிலும் சிதிலமடைந்துள்ளதால் தண்ணீர் விளைநிலங்கள் வழியாக கண்மாய்க்கு வருகிறது.
இக் கண்மாயிலிருந்து விளைநிலங்களுக்கு செல்லக்கூடிய மூன்று மடைகள் முற்றிலும் சிதிலமடைந்தும் தண்ணீர் வெளியேறும் பகுதியில் மணல் மூடிவிட்டது. மேலும் மூன்று மடைகளிலும் ஷட்டர்கள் இல்லை. அதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் நுாற்றுக்கணக்கான ஏக்கர் தரிசாகும் நிலை உள்ளது. கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறும் வழியில் கலுங்கு கட்டாததால் கண்மாய்க்கு வரும் தண்ணீரை முழுவதும் தேக்க முடியாமல் வெளியேறுகிறது. இக் குறைபாடுகள் குறித்து கடந்த 11 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். வரும் நிதியாண்டில் பார்ப்பதாக கூறி நீர்வளத்துறையினர் அலைக்கழிக்கின்றனர்.
தண்ணீர் திறப்பதற்கு சில நாட்களே உள்ளதால் விரைந்து பழுது பார்க்க வேண்டும் என்றார்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், மடைகளை மராமத்து பார்க்க ஏற்பாடு செய்யப்படும். கலுங்கு கட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.