தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அதிகாரம் செய்யும் ஆளும்கட்சி தொழிற்சங்கம் போக்குவரத்துக் கழக ஐ.என்.டி.யூ.சி., எச்சரிக்கை

 அதிகாரம் செய்யும் ஆளும்கட்சி தொழிற்சங்கம் போக்குவரத்துக் கழக ஐ.என்.டி.யூ.சி., எச்சரிக்கை

 அதிகாரம் செய்யும் ஆளும்கட்சி தொழிற்சங்கம் போக்குவரத்துக் கழக ஐ.என்.டி.யூ.சி., எச்சரிக்கை


ADDED : ஜன 24, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஆளும் கட்சி தொழிற்சங்கம் ஆதிக்கம் செலுத்தி அதிகாரம் செய்கிறது என ஐ.என்.டி.யூ.சி., உட்பட மற்ற தொழிற்சங்கங்கள் புலம்புகின்றன.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பஸ்களில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு சுழல் முறையில் சீனியரிட்டி பேட்ச் லிஸ்ட்படி பணிபுரியும் பஸ்கள் வழங்கப்படுகின்றன. இது ஊதியக்குழு ஒப்பந்தத்திலேயே முடிவு செய்யப்படுகிறது.

ஆனால் அதன்படி நடப்பதில்லை. ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்தின் ஆதிக்கத்தால் இயல்பான நடைமுறை மாற்றப்படுகிறது என்று தொழிற்சங்கவாதிகள் புலம்புகின்றனர்.

மதுரை கோட்டத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 18 டெப்போக்களிலும், ஆளுங்கட்சியின் தொ.மு.ச., பேரவையின் இயக்கத்திற்கேற்ப பணி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதன்படி மற்ற சங்கத்தினரை தங்கள் சங்கத்தில் சேர வேண்டும், 'வசூல்' தடத்தில் பணியாற்ற கட்டணம் என நிர்ப்பந்திக்கின்றனர். இதில் சீனியர் பேட்ச் லிஸ்ட் முறையை கடைபிடிப்பதில்லை.

இவ்விஷயத்தில் கூட்டணி கட்சியினருக்குக் கூட வாய்ப்பளிப்பதில்லை என ஐ.என்.டி.யூ.சி., தொழிற்சங்கத்தினரிடையே முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. உதாரணமாக வேடசந்துார் கிளையில் 'ஸ்பேர்' பணியாளர்களை, பேட்ச் வழித்தடத்தில் அனுப்ப கிளை மேலாளருக்கு மதுரை கோட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆயினும் அதனை அமல்படுத்த கிளை நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதனால் அங்கு கிளை மேலாளருக்கு அதிகாரம் உள்ளதா, ஆளுங்கட்சி தொழிற்சங்கவாதிகளுக்கு அதிகாரம் உள்ளதா என காங்கிரசின் ஐ.என்.டி.யூ.சி., தொழிற்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக டெப்போ முன்வைத்துள்ள அறிவிப்பு பலகையில், ''கோட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி ஸ்பேர் பணியாளர்களை பேட்ச் வழித்தடத்தில் அனுப்பாவிட்டால் போராட்டம் வெடிக்கும்'' எழுதி எச்சரித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us