/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாலப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
/
பாலப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : செப் 30, 2025 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மேலமடை சந்திப்பு உள்ளிட்ட மேம்பால பணியில் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு கட்டுமான பணியின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள், பாதுகாப்பு அம்சங்கள், நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பாதுகாப்பு உணர்வை மேலோங்க செய்வது என்ற வகையில் நாட்ச் இந்தியா மற்றும் உத்யோகி பிளாஸ்டிக்ஸ் நிறுவனங்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர்கள் ஆனந்த், ஐஸ்வர்யா, நாட்ச் இந்தியா சேர்மன் மீனாட்சி சுந்தரம், நிர்வாக இயக்குனர் வெற்றிவேல்ராஜன், இயக்குனர்கள் பாலமுருகன், குருஷேத்ரா பங்கேற்றனர்.