/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிரானைட் வழக்கில் சகாயம் காணொலியில் ஆஜராக உத்தரவு
/
கிரானைட் வழக்கில் சகாயம் காணொலியில் ஆஜராக உத்தரவு
கிரானைட் வழக்கில் சகாயம் காணொலியில் ஆஜராக உத்தரவு
கிரானைட் வழக்கில் சகாயம் காணொலியில் ஆஜராக உத்தரவு
ADDED : மே 06, 2025 07:42 AM
மதுரை: மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில், கிரானைட் குவாரி வழக்கில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
அவர், 'கிரானைட் குவாரி விதிமீறலில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், எனக்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு விலக்கிக் கொண்டது. எனக்கு அச்சுறுத்தல் உள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாத நிலையில் உள்ளேன்' என, அரசு தரப்பு வழக்கறிஞருக்கு கடிதம் அனுப்பினார்.
சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி லோகேஸ்வரன் நேற்று விசாரித்தார். சகாயம் ஆஜராகவில்லை. அரசு தரப்பு, 'சகாயம் சம்மனை பெறவில்லை. அவருக்கு பாதுகாப்பு அளிக்க தயார்' என, தெரிவித்தது.
நீதிபதி, 'சகாயத்திற்கு புதிதாக சம்மன் அனுப்பப்படுகிறது. அவர் காணொலியில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை, சென்னை முதன்மை மாவட்ட நீதிபதி செய்ய வேண்டும். விசாரணை ஜூன் 6க்கு ஒத்திவைக்கப்படுகிறது' என, உத்தரவிட்டார்.

