/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பல்கலை மையத்திற்கு கிடைச்சாச்சு சம்பளம்
/
பல்கலை மையத்திற்கு கிடைச்சாச்சு சம்பளம்
ADDED : ஜன 30, 2025 05:40 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை பெண்ணிய கல்வி மைய பேராசிரியர்கள், அலுவலர்கள் போராட்டம் எதிரொலியாக நேற்று நிலுவை சம்பளம் வழங்கப்பட்டது.
இம்மையத்தில் பணியாற்றுவோருக்கு யு.ஜி.சி., மானியத்தில் இருந்து பல்கலை பதிவாளர் சார்பில் சம்பளம் வழங்கப்படும். ஆனால் 'பதிவாளர் பெயரில், மைய இயக்குநர் முன்பணம் பெற்று சம்பளம் வழங்க வேண்டும்' என்ற புதிய நடைமுறையை பின்பற்ற நிதி அலுவலர் ஆனந்தன் தன்னிச்சையாக உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைய இயக்குநர் ராதிகாதேவி தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. இதன் எதிரொலியாக நேற்று 5 மாத நிலுவை சம்பளம் வழங்கப்பட்டது.
ராதிகாதேவி கூறுகையில், பதிவாளர் பெயரில் உள்ள பல்கலை கணக்கில் இருந்தே நிலுவை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. சம்பளம் வழங்குவதில் ஏற்படும் குழப்பங்களுக்கு தீர்வாக இந்த நடைமுறையே பின்பற்ற வேண்டும் என்றார்.