/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் செய்தியால் கிடைத்தது சம்பளம்
/
தினமலர் செய்தியால் கிடைத்தது சம்பளம்
ADDED : ஜூன் 27, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரையில் உள்ள 15 கல்வி ஒன்றியங்களில் அரசு பள்ளி துாய்மைப் பணியாளர்களுக்கான சம்பளம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை.
அவர்களின் வாழ்வாதாரம் கருதி பல பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் உதவி செய்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அனைத்து கல்வி ஒன்றியங்களிலும் துாய்மைப் பணியாளர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்வகுமரேசன், செயலாளர் பாரதி சிங்கம், பொருளாளர் தென்னவன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.