ADDED : ஜூலை 23, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே அழகர்கோவில் ரோட்டில் நான்கு கால் கல்மண்டபம் உள்ளது. அழகர் வரும் பல்லக்கு நெகிழ்ந்து போகாமல் கச்சிதமாக உள்ளதா என அறிய இம்மண்டபம் வழியாக கொண்டு சென்று பார்ப்பர். இடிபடாமல் வெளியேறினால் கச்சிதமாக உள்ளது என்று பொருள். சில ஆண்டுகளுக்கு முன்வரை பயன்பாட்டில் இருந்தது. பிளாட்பார்ம் உயர்ந்ததால் நின்று போனது.
தற்போது ரோடு விரிவாக்கத்திற்காக இதை அகற்ற நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது அகற்றாமல் ரோடு பணியை மேற்கொள்ள வேண்டும் என மாடக்குளம் நாகசீனிவாசன் என்பவர் நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைத்தார்.
உதவி கோட்டப் பொறியாளர் சுகுமார் தெரிவித்த பதிலில், 'கல்துாண் மண்டபத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பணி நடக்கும்' என தெரிவித்துள்ளார்.