தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சமத்துவபுரம் பயனாளிகள் அவதி

சமத்துவபுரம் பயனாளிகள் அவதி

சமத்துவபுரம் பயனாளிகள் அவதி


UPDATED : நவ 02, 2026 05:47 PM

ADDED : நவ 02, 2026 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 05:47 PM ADDED : நவ 02, 2026 05:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: சமத்துவபுரத்தில் வீடுகள் கட்டியவர்களுக்கு மானியம் கிடைக்காமல் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கள்ளிக்குடி ஒன்றியம் உலகாணியில் 2010 ல் சமத்துவபுரம் தொடங்கப்பட்டது. இதில் 93 வீடுகள் இருந்த நிலையில் தற்போது புதிதாக ஏழு பயனாளிகள் வீடுகளை கட்டினர். அவர்களில் ஐந்து பயனாளிகளுக்கு தலா ரூ. 5 லட்சம் அரசு தரப்பில் மானியம் கொடுக்கப்பட்டது. இரண்டு பயனாளிகளுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்கவில்லை.

அதேபோல் ஏற்கனவே கட்டியிருந்த 93 வீடுகளின் மராமத்து பணிகளை சம்பந்தப்பட்ட பயனாளிகளே செய்தனர். அவர்களில் 10க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ. 73 ஆயிரம் வீதம் இதுவரை பணம் வழங்கப்படாமல் 2 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் சமத்துவபுரம் பயனாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். கூலித் தொழிலாளர்களான அவர்கள் வட்டிக்கு பணம் பெற்று, கடனை கட்ட இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல் அந்தப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பெரியார் சிலை மற்றும் ரேஷன் கடை பராமரிப்பு பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணம் தராமல் இழுத்தடிக்கப்படுவதால் அவர்களும் கடும் சிரமத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து சமத்துவபுரம் பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us