/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எப்படி வாழ வேண்டும் என்று சொல்வதுதான் சனாதன தர்மம் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் பேச்சு
/
எப்படி வாழ வேண்டும் என்று சொல்வதுதான் சனாதன தர்மம் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் பேச்சு
எப்படி வாழ வேண்டும் என்று சொல்வதுதான் சனாதன தர்மம் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் பேச்சு
எப்படி வாழ வேண்டும் என்று சொல்வதுதான் சனாதன தர்மம் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் பேச்சு
ADDED : மார் 04, 2024 05:47 AM

மதுரை: 'உலகில் எப்படி வாழ வேண்டும் என்று சொல்வது சனாதன தர்மம்' என்று தினமலர் ஆன்மிக மலரில் எழுதும் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் பேசினார்
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் அனுஷ உற்சவ விழா மதுரை எஸ்.எஸ். காலனி எஸ்.எம். கே., திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன், 'சம்போ சிவ சம்போ' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அவர் பேசியதாவது.
சிவபெருமான் அன்பு வடிவானவர். அன்பையும் இறைவனையும் ஒன்று என சொன்னது நமது சனாதன தர்மம். வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதை சொன்னது சனாதன தர்மம்.
மனிதநேயத்தை தாண்டி அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இருக்க வேண்டும் என்பதை நமது நாயன்மார்கள் வாழ்ந்து காட்டினர். இறைவனுக்கு, கொடுக்க வேண்டும் என்பதே நமது மரபு. எனவேதான் நாயன்மார்கள் அனைவரும் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் இறைவனுக்கு கொடுத்தனர்.
கொடுப்பது என்பது பொருள் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. தாங்கள் செய்யும் பணிகளில் கூட இறையடியார்களுக்கு உதவி இறைவன் அருளை பெற்றார்கள்.
மட்பாண்டம் செய்யும் திருநீலகண்டர் மண்ணால் ஆன பாத்திரத்தை செய்து அடியவர்களுக்கு வழங்கினார். திருக்குறிப்பு தொண்டர் என்னும் சலவை தொழிலாளி அடியவர்களின் உடைகளை இலவசமாக துவைத்து கொடுத்தார்.
எனவே நாமும் சிவராத்திரி நன்னாளில் இறைவனை வழிபாடு செய்வதுடன் ஏழை எளியோர், உடல்நலம் குன்றியோருக்கு, சிறிய அளவிலேனும் தர்மம் செய்ய வேண்டும்.
தற்காலத்தில் சிவராத்திரி அன்று நிறைய ஆலயங்களில் இரவு முழுவதும் அன்னதானம் செய்கின்றனர். ஆனால் அன்று முழுவதுமாக உண்ணா நோன்பு இருப்பதே சிறந்தது என பெரியவர்கள் வேதங்களின் வழி நின்று தெரிவிக்கின்றனர். அன்பு தான் கடவுள் என்று பெரியவர்கள் நமக்கு சொல்லித் தந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்திருந்தார்.

