/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பரவை வைகை ஆற்றில் தொடரும் மணல் கடத்தல்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
பரவை வைகை ஆற்றில் தொடரும் மணல் கடத்தல்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பரவை வைகை ஆற்றில் தொடரும் மணல் கடத்தல்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பரவை வைகை ஆற்றில் தொடரும் மணல் கடத்தல்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜன 05, 2026 05:35 AM

வாடிப்பட்டி: சமயநல்லுார் நான்கு வழிச்சாலை பரவை வைகை ஆற்றின் நடுவே மணல் அள்ளும் இயந்திரம், டிப்பர் லாரிகள் மூலம் மணல் திருட்டு தொடர்கிறது.
மதுரை பைபாஸ் ரோடு காமராஜர் பாலம் முதல் சமயநல்லுார் வரை வைகை வடகரையில் 8 கி.மீ.,க்கு ரூ.176 கோடியில் தடுப்புச்சுவர், தார்ச் சாலை அமைக்கும் பணி ஓராண்டாக நடந்து வருகிறது.
இந்த கட்டுமான பணிக்கு ஆற்றின் நடுவே இயந்திரங்கள் மூலம் கருவேல மரங்களை அகற்றி ஆயிரக்கணக்கான யூனிட் மணல் திருடப்பட்டுள்ளது.
டிப்பர் லாரிகளில் வெளி பகுதிகளுக்கும் கடத்தப்படுகிறது. இதனால் ரூ.பல கோடி மதிப்பில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆழமாக மண் அள்ளப்பட்டுள்ளதால் வெள்ளத்தின் போது உயிர் பலியும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர் பாலமுருகன்: அதிகாரிகள் துணையோடு வைகை ஆற்றுக்குள் மணல் அள்ளப்படுகிறது.
வெளியேயும் கடத்தி செல்கின்றனர். கடந்த மே மாதம் பவர் ஹவுஸ் மயானம் அருகே ஆற்றின் நடுவே இதேபோல் மண் திருடப்பட்டது. தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதும் பள்ளத்தை சமன் செய்தனர். வெள்ளத்தின் போது அப்பள்ளத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் அளித்தால் போலீசாரால் மிரட்டப்பட்டேன். இன்று வரை புகார் நிலுவையில் உள்ளது. கனிமவளம் திருட்டு குறித்து புகார் செய்ததால் ஆளும் தரப்பினர் சமரசம் பேசினர்.
அதை ஏற்காததால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.

