ADDED : செப் 21, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் மதநல்லிணக்க விழா நேற்று நடந்தது.
மாலையில் சந்தனக்கூடு ஊர்வலம் மின்சாரவிளக்கு அலங்காரத்துடன், மேளதாளம்முழங்க, ஒட்டகம், நாட்டிய குதிரைகள் பங்கேற்க முக்கிய வீதிகள் வழியாக நடந்தது.
சர்வசமயத்தினரும் இதில் பங்கேற்றனர். மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள்சையது பாபுஜான், சையது சம்சுதீன், சையது ரசூல், சம்சுதீன் அபு மற்றும்பரம்பரை தர்கா ஹக்தார்கள் செய்திருந்தனர்.