நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் போக சித்தர் வழங்கிய அம்ருத சஞ்ஜீவினி வழிபாடு நடந்தது.
தொற்றுநோய் தடுக்கவும், அனைவரின் நலன் காக்கவும் சேவகன் ஜோதி ராமநாதன் வழிபாடு நடத்தினார். ஆதிசங்கரர் அருளிய மஹா மிருத்ஞ்ஜய கவசம், மார்கண்டேயர் அருளிய ருத்திரபதிகம், திருஞான சம்பந்தரின் தேவார பதிகங்கள், வள்ளலார் அருளிய மருந்து பதிகம் பாராயணம் செய்து ஆராதிக்கப்பட்டது.
பிரதோஷ பூஜை
வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகர் கோயில், விஸ்வநாத சுவாமிக்கு பிரதோஷகால பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நிர்வாக தலைவர் நல்லதம்பி, செயலாளர் ராஜாங்கம், பொருளாளர் ஜானகிராமன் பங்கேற்றனர்