ADDED : மார் 08, 2026 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். அருள் விளக்கேற்றி அகவல் படிக்கப்பட்டது.
ராமலிங்கம் மரணமில்லா பெருவாழ்வு எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஜோதி வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சாந்தி நன்றி கூறினார்.

