ADDED : ஏப் 15, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண்மைக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் கீழசின்னணம்பட்டி கிராமத்தில் கொய்யா, பலா, அரை நெல்லி மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் மோகன், செயலாளர் தவசுமுத்து, பொருளாளர் ஜேசுராஜ், உறுப்பினர் மணிசேகரன் பழ மரக்கன்றுகளை வழங்கினார்.
விவசாய கல்லுாரியின் 'மகோஸா 83 கல்வி மறறும் சமூகநல அறக்கட்டளை' சார்பில் தலைவர் கண்ணன் பாபு, நிர்வாகிகள் பார்த்திபன், முருகன், ஆறுமுகம், கருப்பையா ஆகியோர் 100 தென்னங்கன்றுகள் வழங்கினர்.
நல்லமணி குழுமத் தலைவர் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷன் செய்திருந்தார்.