நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி பந்தாணி கண்மாய் கரையை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.
ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ராஜாகோவிந்தசாமி, முன்னாள் ஆளுநர் ஜெயக்கண்ணன், துணை ஆளுநர் கணேசன், ஊராட்சித்தலைவர் சுரேஷ், புலவர் சின்னன் உள்ளிட்டோர் 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.
தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம், உசிலம்பட்டி வளர்ச்சிமையத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். கிராமத்தின் சார்பில் தினேஷ், செல்லக்குமார் நன்றி கூறினர்.