/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் ஸ்டாலினுக்கு சரவணன் கேள்வி
/
முதல்வர் ஸ்டாலினுக்கு சரவணன் கேள்வி
ADDED : மார் 25, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் நடந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன்
பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. கட்சியின் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க.,வில் உயர் பொறுப்பில் சிறுபான்மை இன மக்களை ஸ்டாலின் நியமித்தது உண்டா. சிறுபான்மை இன மக்களை ஓட்டு வங்கியாகத்தான் கருணாநிதி பார்த்தார். தற்போது ஸ்டாலின் பார்க்கிறார். சட்டசபை தேர்தலில் போது முஸ்லிம் மக்களுக்காக பல்வேறு தேர்தல் வாக்குறுதியை ஸ்டாலின் கொடுத்தார். அதில் எதையாவது செய்தாரா. இவ்வாறு பேசினார்.