UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 05:54 PM
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி – பிலிப்பைன்ஸ் உர்டானெட்டா சிட்டி பல்கலை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதுகலை கணினிப் பயன்பாட்டியல் துறை, பிலிப்பைன்ஸ் நாட்டின் உர்டானெட்டா சிட்டி பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. முதல்வர் ஸ்ரீனிவாசன், உர்டானெட்டா சிட்டி பல்கலை பேராசிரியர் அமிஹான் சி. மெல்லா அல்காசர் கையெழுத்திட்டனர். இதன் மூலம் மாணவர்கள் உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிகள், புதிய ஆராய்ச்சி அணுகுமுறைகள், சர்வதேச கல்வி நடைமுறைகளை அறியும் வாய்ப்பு பெறுவர் என கல்லுாரி முதல்வர் தெரிவித்தார்.
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் துரைச்சாமி, துறை தலைவர் அனுராதா, புல முதன்மையர் கலைவாணி, ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, பங்கேற்றனர்.
