/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாளை எஸ்.பி.ஐ., வீட்டுக்கடன் திருவிழா
/
நாளை எஸ்.பி.ஐ., வீட்டுக்கடன் திருவிழா
ADDED : ஆக 17, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள அரசரடி எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் வீட்டுக்கடன் திருவிழா நாளையும், நாளை மறுநாளும்(ஆக. 18,19) நடக்கிறது. வாடிக்கையாளர்கள் புதிய, பழைய வீடு வாங்க, கட்ட, காலிமனை வாங்க 7.5 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் பெறலாம்.
வீட்டு அடமான கடன், சொத்தின் மீதான கடன், 12 மாத தவணைகளுக்கு பிறகு 'டாப் அப்' செய்யும் வசதி, மற்ற வங்கிகளில் இருந்து வீட்டு கடனை மாற்றினால் செயலாக்க கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வீட்டுக் கடன்பெறலாம். விவரங்களுக்கு 90035 22582ல் தொடர்பு கொள்ளலாம்.