/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயமுறுத்தும் பஸ்நிறுத்தம்: மாணவர்கள் வருத்தம்
/
பயமுறுத்தும் பஸ்நிறுத்தம்: மாணவர்கள் வருத்தம்
ADDED : நவ 15, 2025 05:15 AM

பாலமேடு: சின்ன பாலமேடு பிரிவு அய்யனார் கோயில் பஸ் ஸ்டாப் பழுதடைந்துள்ளதால், மாணவர்கள் அச்சத்துடன் அருகே வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் காத்திருக்கின்றனர்.
இந்த பஸ்நிறுத்தத்தை பாலமேடு செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் தினமும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன் கட்டிய பஸ்நிறுத்தம் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. தற்போது மது பிரியர்களுக்கு 'பாராக'வும், போஸ்டர் ஒட்டும் இடமாகவும் மட்டுமே பயன்படுகிறது.
சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. எனவே பயணிகள் வெயில், மழைக்கு ரோட்டில் நிற்கும் நிலை உள்ளது.
பஸ்நிறுத்தம் அருகே குடிநீர் குழாய்களில், சாலையோரம் முட்கள், அரிப்பு ஏற்படுத்தும் செடிகள் உள்ள பகுதியில் மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த பஸ்நிறுத்தத்தை பராமரிக்க வேண்டும் அல்லது புதிதாக கட்ட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

