/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கபடிக்கான உள்ளரங்கு மற்றும் உள் விளையாட்டரங்குகள் அமைக்க திட்டம்
/
கபடிக்கான உள்ளரங்கு மற்றும் உள் விளையாட்டரங்குகள் அமைக்க திட்டம்
கபடிக்கான உள்ளரங்கு மற்றும் உள் விளையாட்டரங்குகள் அமைக்க திட்டம்
கபடிக்கான உள்ளரங்கு மற்றும் உள் விளையாட்டரங்குகள் அமைக்க திட்டம்
ADDED : நவ 15, 2024 05:55 AM

மதுரையில் கபடிக்கான ஒரு உள்ளரங்கு, டேபிள் டென்னிஸ் போட்டிக்கான 6 உள்ளரங்குகள், 250 இருக்கைகளுடன் கூடிய உள் விளையாட்டரங்கம், ஆண், பெண் உடை மாற்றும் அறைகள், புதிய உடற்பயிற்சி கூடம் புதிதாக அமைக்கப்பட உள்ளது.
ஏற்கனவே சேதமடைந்த நிலையில் உள்ள திறந்தவெளி கூடைப்பந்து, டென்னிஸ் அரங்குகள் பார்வையாளர்களுக்கான இருக்கைகளுடன் கூடிய அரங்காக புதுப்பிக்கப்பட உள்ளன.
இவை வரவேற்கக்கூடியதாக இருந்தாலும் தவறான இடத்தை தேர்வு செய்து கபடி அரங்கு அமைக்க திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர் பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள். அவர்கள் கூறியதாவது: மைதானத்தின் இடதுபக்கத்தில் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து அரங்குகளுடன் கார் பார்க்கிங் செய்ய இடவசதி உள்ளது. வலது பக்கத்தில் ஜாகிங் கிளப், வாலிபால் அரங்கை ஒட்டி டூவீலர்கள் நிறுத்துவதற்கு இடவசதி உள்ளது.
முக்கோண வடிவில் உள்ள டூவீலர் பார்க்கிங் பகுதியை கபடி, டேபிள் டென்னிஸ் கட்டுவதற்கான இடமாக மாவட்ட விளையாட்டு அலுவலகம் தேர்வு செய்துள்ளது. பார்க்கிங்கை ஒட்டி பார்வையாளர் கேலரியும் இருப்பதால் எந்த விதத்திலும் இந்த இடம் போதுமானதாகவும், பொருத்தமாகவும் இருக்காது. தற்போதே மாவட்ட, மாநில போட்டிகள் நடத்தும் போது வாகனங்களை நிறுத்த வழியின்றி வெளியே ரோட்டில் நிறுத்தப்படுகிறது. முன்பகுதியில் உள்ள ஜாகிங் கிளப் தனியார் நிறுவனத்திடம் இருந்து மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த இடத்தை கபடி உள்ளரங்குக்கு தேர்வு செய்யலாம். அல்லது நீச்சல் குளத்தின் பின்பகுதியில் உள்ள கிரிக்கெட் வலைப் பயிற்சி பகுதியை தேர்வு செய்யலாம். மேலும் துண்டு துண்டாக ஆங்காங்கே ஒருமாடி கட்டடம் என்று கட்டுவதை விட பொருத்தமான இடத்தை தேர்வு செய்து பல மாடி கட்டடமாக கட்டலாம்.
தற்போதுள்ள ஜிம்னாஸ்டிக் அரங்கின் மேற்பகுதி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வேயப்பட்டு நான்கு பக்கமும் கம்பிவலையால் வேலி அமைக்கப்பட்டுள்ளது. மழை அதிகமாக பெய்யும் போது அரங்கினுள் மழைநீர் கசிந்து மெத்தைகள் பாழாகின்றன. மேற்கூரையை கான்கிரீட்டாக மாற்றி முதல் தளத்தில் பெய்வதால் அகற்றிவிட்டு முதல் தளம் கட்டி அதில் உடற்பயிற்சி அரங்கு அமைக்கலாம் என்றனர்.