ADDED : ஜன 07, 2025 05:04 AM
கருத்தரங்கு
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு பீமா சகி யோஜனாவின் சிறப்பு திட்டங்கள், பயன்பாடுகள் குறித்த சிறப்பு கருத்தரங்கு செயலாளர் குமரேஷ் தலைமையில் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சந்தியா வரவேற்றார் எல்.ஐ.சி. முதுநிலை கிளை மேலாளர் கண்ணன், வளர்ச்சி அலுவலர் சனத்குமார் பேசினர். மாணவி அஸ்ரின் நன்றி கூறினர்.
ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடந்தன. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் ராமசுப்பையா துவக்கி வைத்தார். ஜன.10வரை தினமும் காலை, மாலை நாடகம் நடக்கிறது. சுயநிதிப் பிரிவை இயக்குனர் பிரபு, ஆங்கிலத் துறை தலைவர் தனலட்சுமி, பேராசிரியர் ஜோசப் பால் ஸ்பெசலீல், சரோஜா ஒருங்கிணைத்தனர்.
இயந்திரம் வழங்கல்
திருமங்கலம்: அரசு பெண்கள் பள்ளியில் 1800 மாணவிகள் படிக்கின்றனர். நகராட்சி சார்பில் நாப்கின் எரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் ரம்யா, தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியிடம் வழங்கினார். சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், துப்புரவு மேற்பார்வையாளர் கேசவன், துாய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா, அனிதா, சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஓவியப்போட்டி
திருமங்கலம்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை சார்பில் திருமங்கலம் கிரீன் டிரஸ்டுடன் இணைந்து திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஓவிய போட்டி நடந்தது. சுற்றுச்சூழல் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, விருதுநகர் ஒருங்கிணைப்பாளர் கவிதா முன்னிலை வகித்தனர். ஓவிய போட்டியில் 76 தேசிய பசுமைப் படை மாணவியர், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நீட்டிப்பு செயல்பாடு
மதுரை: மதுரை கல்லுாரி சுயநிதிப்பிரிவு இயற்பியல் துறை சார்பில் நீட்டிப்பு செயல்பாடு (எக்டென்ஷன் ஆக்டிவிட்டி) முதன்மை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமையில் நடந்தது. இதில் மேல்நிலை வகுப்பு இயற்பியல் ஆய்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன. யு.சி., மற்றும் ஆயிர வைசியர் பள்ளி மாணவர்கள் ஆய்வுகளை பார்வையிட்டனர். பேராசிரியர் சிவராமகிருஷ்ணன், துரை, ஒருங்கிணைப்பாளர் அங்கயற்கண்ணி, பேராசிரியர்கள் பாண்டி, வெங்கடேசன், ராமகிருஷ்ணன், ரேவதி, கண்காணிப்பாளர் பட்டாபிராமன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முதல், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் செய்திருந்தனர்.
கலைவிழா போட்டிகள்
மதுரை: யாதவர் கல்லுாரியில் ரோட்ராக்ட் கிளப் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான கலைவிழா போட்டிகள் முதல்வர் ராஜூ தலைமையில் நடந்தது. முன்னாள் செயலாளர் எஸ்.கண்ணன் துவக்கி வைத்து சுயஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியன மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றார். செயலாளர் என்.கண்ணன் முன்னிலை வகித்தார். ரோட்ராக்ட் கிளப் பொறுப்பாளர் ராஜாகோவிந்தசாமி, விஞ்ஞானி கார்த்திக் நாகரத்தினம், கல்லுாரி தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் பேசினர். இயக்குநர் ராஜகோபால், நடிகர் பரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 21 அணிகள் பங்கேற்றன. யாதவர் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது. மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி 2ம் இடம் பெற்றது. கிளப் ஒருங்கிணைப்பாளர் சபரிநாதன் ஒருங்கிணைத்தார்.