ADDED : பிப் 02, 2025 05:06 AM
தேசிய பயிற்சி பட்டறை
மதுரை: வேலம்மாள் பொறியியல் கல்லுாரியில் ஆன்டெனா, மைக்ரோவேவ் தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தேசிய பயிற்சி பட்டறை நடந்தது. முதல்வர் அல்லி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினரான பெங்களூரு டி.ஆர்.டி.ஓ., இணை இயக்குனர் ராம்பிரபு, டி.ஆர்.டி.ஓ.,வில் இ.சி.இ., பொறியாளர்களுக்கான அரசு வேலை வாய்ப்புகள், ஆர்.எப்., டொமைனின் சமீபத்திய முன்னேற்றங்கள், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி குறித்து விளக்கினார். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் துறைத் தலைவர் வாசுகி, ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்ராஜன் பங்கேற்றனர். டி.என்.எஸ்.சி.எஸ்.டி., சார்பில் மின்னணுவியல், தகவல் தொடர்பு பொறியியல் துறையினர் ஏற்பாடு செய்தனர்.
தேசிய கருத்தரங்கு
மதுரை: பாத்திமா கல்லுாரியில் 'தி ரிசர்ச் சென்டர் ஆப் காமர்ஸ் 360 நெறிமுறைகள்' குறித்த தேசிய கருத்தரங்கு நடந்தது. முதல்வர் செலின் சகாயமேரி தலைமை வகித்தார். செயலாளர் இக்னேஷியஸ்மேரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் நரேந்திரநாத் ஜெனா, மதுரை ஐ.சி.எஸ்.ஐ., தலைவர் ராமலிங்கம், எச்.சி., கோத்தகரி நிறுவனங்களின் துணைத் தலைவர் பிரகாஷ் பங்கேற்றனர். முதல் கட்ட அமர்வில் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் மேலாண்மை திட்ட இயக்குனர் சுப்பிரமணியன், இரண்டாம் அமர்வில் பிஸ்ப்ரூட் கார்ப்பரேட் நிறுவனத்தின் தொழிலாளர்சட்ட இணக்க மேலாளர் நாராயண் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். டி.வி.எஸ்., நிறுவனத்தின் செயலாளர் குத்தாலசங்கரன் மாணவர்களின் கட்டுரைகளுக்கு மதிப்புரை வழங்கினார்.
வேலைவாய்ப்பு
மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லுாரியில் டாபே டிராக்டர் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. சேர்மன் மாதவன் தலைமை வகித்தார். முதல்வர் தவமணி முன்னிலை வகித்தார். நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அலுவலர்கள் ராஜ்குமார், கணேஷ்குமார் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி 40 பேரை தேர்வு செய்தனர். செயல் அலுவலர்கள் முத்துமணி, பிரபாகரன், மீனாட்சிசுந்தரம், காந்திநாதன், துணை முதல்வர் ஜெயபிரசாத் மாணவர்களை பாராட்டினர். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் அனீஸ் பாத்திமா, பேராசிரியர் முரளி செய்திருந்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப்பிரிவு கணினி அறிவியல் துறை சார்பில் 'உங்கள் ஆரோக்கியம் உங்கள் உரிமை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். உடல் ஆரோக்கியம், சத்தான உணவுகள், அரசின் தனிநபர் மற்றும் குடும்ப காப்பீட்டு திட்டம் குறித்து விளக்கப்பட்டது. துறைத் தலைவர் தேவிகா, உதவி பேராசிரியர்கள் ஹேமாவதி, வீரபாண்டி ஒருங்கிணைத்தனர்.
அறிவியல் கண்காட்சி
கருமாத்துார்: அருள் ஆனந்தர் கல்லுாரியில்அறிவியல் மற்றும் தொழில் நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் இணைந்து தேசிய அறிவியல்தின கண்காட்சி நடந்தது. கல்லுாரி செயலாளர் அந்தோணிசாமி துவக்கி வைத்தார். துணை முதல்வர் ஜெயபாஸ்கரன் வரவேற்றார். அதிபர் ஜான் பிரகாசம், முதல்வர் அன்பரசு, இணை முதல்வர் சுந்தரராஜ், துணை முதல்வர் துரைசிங்கம், நோடல் அதிகாரி சோபியா, ஒருங்கிணைப்பாளர் பாண்டீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பயிற்சி முகாம்
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை காம் கேப்ஸ் சங்கம், சன் பார்மா சார்பில் கார்டியோ புல்மோனரி புத்துயிர்( சி.பி.ஆர்.) பயிற்சி முகாம் நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர்கள் ராஜாமணி, மஞ்சுளா ஒருங்கிணைத்தனர். துறைத் தலைவர் நாகசுவாதி நன்றி கூறினார்.