ADDED : பிப் 12, 2025 04:45 AM
விவேகானந்தர் ஜெயந்தி
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலம்பம், கராத்தே, ஜிம்னாஸ்டிக், யோகாசனம், கூட்டுப் பயிற்சி செய்தனர். டில்லி மற்றும் சென்னை குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு திருச்சி, திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன உப தலைவர் நியமானந்த பரிசு வழங்கினார். மதுரை கல்லுாரி பொருளியல் துறை தலைவர் தீனதயாளன் பேசினார். திருச்சி தபோவனம் மற்றும் விவேகானந்த கல்லுாரி சுவாமிகள், பண்ணைக்காடு விவேகானந்த வித்யாலயா பள்ளி செயலர் கங்காதாரானந்த உட்பட பலர் பங்கேற்றனர். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., யோகா பயிற்சியில் சாதித்த மாணவர்களுக்கு கல்லுாரி நிர்வாகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலத்தில் தேசபக்தி நாடகங்கள் நடந்தது.
கருத்தரங்கு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை காம் கேப்ஸ் சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி., ஒரு கண்ணோட்டம் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி சுகிதா வரவேற்றார். மதுரை சாட்டர்டு அக்கவுன்டன்ட் அசோசியேட்ஸ் மேனேஜிங் பார்ட்னர் பிரதீப் பேசினார். துறை தலைவர் நாகசுவாதி, பேராசிரியர்கள் ராஜாமணி, மஞ்சுளா ஒருங்கிணைத்தனர்.