ADDED : மார் 16, 2025 06:23 AM
கருத்தரங்கு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி ஆளுமை மையம் சார்பில் சட்டம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். பெண்கள் ஆளுமை மைய ஒருங்கிணைப்பாளர் வீரம்மாள் வரவேற்றார். டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் பேசினார். துணை ஒருங்கிணைப்பாளர் கற்பக ஜோதி நன்றி கூறினார்.
உலக நுகர்வோர் தினம்
வாடிப்பட்டி: மதுரை வேளாண் கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கீர்த்தனா, கீர்த்தனா தேவி, கீர்த்தனா, காத்தீஸ்வரி, கீர்த்தி, கிருபாஷினி, கோமளவள்ளி, கிருஷ்ணவேணி, லட்சுமி கணேஷ்வரி ஆகியோர் வாடிப்பட்டி வட்டாரத்தில் கிராமப்புற அனுபவத்திட்டத்தில் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கட்டக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் நுகர்வோர் உரிமைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். தலைமை ஆசிரியர் ரேவதி துவக்கி வைத்தார். நுகர்வோர் உரிமைகள் குறித்த நாடகம் மூலம் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தனர். கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் மஞ்சுளா வரவேற்றார். பயிற்சியாளர்கள் நாகஜோதி, பவித்ரா பேசினர். மாணவி தேவசுகந்தி நன்றி கூறினார்.
பள்ளி ஆண்டு விழா
திருப்பரங்குன்றம்: தென்பழஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் அருள்முருகன் தலைமை வகித்தார். பேபி முன்னிலை வகித்தார். ஆசிரியர் கந்தசாமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் அன்புமொழி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் பயிற்றுநர் செல்வம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவராமன், துணைத் தலைவர் மணிகண்டன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மேகலா, ராஜேஸ்வரி, மாலதி, பவுலின்நவமணி, லதா, மகாலட்சுமி ஒருங்கிணைத்தனர்.ஆசிரியர் போஸ்ராஜா நன்றி கூறினார்.
கல்லுாரி தின விழா
மதுரை: பாத்திமா கல்லுாரியில் 72வது கல்லுாரி தின விழா செயலாளர் இக்னேஷியஸ் மேரி தலைமையில் நடந்தது. உதவிப் பேராசிரியர் ஆன்சிமா வரவேற்றார். முதல்வர் செலின் சகாய மேரி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் புனித வளனார் கல்லுாரி முதல்வர் மரியதாஸ் பங்கேற்றார். மாணவியர் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்துறைகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். உதவிப் பேராசிரியர் மேக்டலின் வெர்ஜினி நன்றி கூறினார். துணை முதல்வர்கள் பாத்திமா மேரி, அருள்மேரி, டயானா கிறிஸ்டி, மீனாட்சி, பேராசிரியர் எஸ்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரலாறு பயிற்சி பட்டறை
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் பாரம்பரிய கோயில்களின் கட்டமைப்பு, ஆன்மிக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை கல்லுாரி நுாலகம் மற்றும் சமஸ்கிருத துறை, காந்தி கிராம லட்சுமி கல்வியியல் கல்லுாரி சார்பில் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். சமஸ்கிருத துறை தலைவர் ஸ்ரீதர் சுவாமிநாதன் வரவேற்றார். சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மானந்த முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ்., மண்டல பி.ஆர்.ஓ., கணேஷ் பாபு துவக்கி வைத்தார்.
முன்னாள் மாணவர் சங்க செயலாளர் பேராசிரியர் தீனதயாளன், முன்னாள் முதல்வர் வன்னிய ராஜன் பேசினர். முன்னாள் துணை முதல்வர் இளங்கோ, துறை பேராசிரியர் சந்திரன் உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாபு, கல்வியியல் கல்லுாரி ஆங்கில துறை உதவி பேராசிரியர் வின்சென்ட் ராஜசேகர், சுவாமிநாதன் பங்கேற்றனர். முன்னாள் சமஸ்கிருத தலைவர் அனந்தராமன் கோயில்களில் பொதுவான வடிவமைப்பு, கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ் துறை உதவி பேராசிரியர் கரிகாலன் கோயிலின் வரலாற்றை எழுதுவதில் உள்ள சவால்கள் என்ற தலைப்புகளில் பேசினர். நூலகர் பிரபாகரன் நன்றி கூறினார்.
பள்ளி விழா
திருமங்கலம்: என்.ஆர்.எம்., ட்ரீம் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'யு.கே.ஜி., ட்ரீமர்ஸ்' என்ற பெயரில் யு.கே.ஜி.,யில் இருந்து 1ம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. விருதுநகர் வி.வி. வன்னிய பெருமாள் கல்லுாரி முதல்வர் சிந்தனா பட்டமளித்தார். தாளாளர் ஷாலினி, சேர்மன் மதிவாணன், முதல்வர் பிரியதர்ஷினி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சி பாசறை
மதுரை: செந்தமிழ்க் கல்லுாரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவர்களுக்கான இளையோர்இலக்கிய பயிற்சி பாசறை நடந்தது. சங்க செயலாளர் மாரியப்ப முரளி தலைமை வகித்தார். துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி வரவேற்றார்.பாசறையின் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் கவிஞர் நெல்லை ஜெயந்தா, தமிழாசிரியர் சேவியர் பீட்டர் பால்ராஜ், மனநலப் பயிற்சியாளர் வித்யாகோமதி, உதவி பேராசிரியர் செந்தில் குமார், இரண்டாம் அமர்வில் டாக்டர் ரோகிணி, செந்தில், பி.கே.என்., கல்லுாரி பேராசிரியர்கண்ணதாசன் உள்ளிட்டோர் பேசினர்.
மென் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை காம்கேப்ஸ் சங்கம் சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்க்ரோலிங் முதல் சம்பாதிப்பது வரை என்ற தலைப்பில் மென்பொருள் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவர் ஹரிஷ் வரவேற்றார். மாணவி ரம்யா அறிமுக உரையாற்றினர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிர்வாகி தினேஷ்குமார் பேசினார். துறைத் தலைவர் நாகசுவாதி, பேராசிரியர்கள் மஞ்சுளா, ராஜாமணி ஒருங்கிணைத்தனர்.
கருத்தரங்கம்
மதுரை: கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் குறித்தகருத்தரங்கு நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் முரளிதரன் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்தன் வரவேற்றார். மாவட்ட தொழில் மையம்உதவி இயக்குனர் கிருஷ்ணன் பேசுகையில், அரசாங்க சிறு, குறு நடுத்தர நிறுவனம் திட்டங்கள் தொழில் முனைவோருக்கு பல்வேறுவகையில் உதவுகிறது'என்றார். துணை முதல்வர் சகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஐம்பெரும் விழா
மதுரை: எல்.கே.பி., நகர் அரசு பள்ளியில் பை தினம், கணித கண்காட்சி, பரிசளிப்பு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு,மகளிர் தினம் என ஐம்பெரும் விழா நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர் ஜான்சி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தென்னவன்வரவேற்றார். தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும்பரிசுவழங்கப்பட்டது. ஆசிரியை அனுசியா நன்றி கூறினார்.
107வது ஆண்டுவிழா
கொட்டாம்பட்டி: குன்னாரம் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 107வது ஆண்டு விழா நடந்தது. ஆசிரியர் சுமதி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். அனுசுயா தேவி ஆண்டு அறிக்கை வாசித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர்கள் கன்னியப்பன், கதிரேசன் சிறப்புரையாற்றினர். ஆசிரியர் மேரி ஷபிலா, சிறப்பு பயிற்றுநர் பாண்டி, பள்ளி கணக்காளர் தங்க காளீஸ்வரன், கிராம முக்கியஸ்தர் கர்ணன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ராஜ் நன்றி கூறினார்.