ADDED : மார் 26, 2025 04:51 AM
சர்வதேச கருத்தரங்கு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி பொருளாதாரத் துறை சார்பில் சவால்களை வழி நடத்துதல் மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்துதல் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ராம சுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தனர். பொருளாதாரத்துறை தலைவர் பழனி வரவேற்றார். அமெரிக்க கிளாப்ளின் பல்கலை பேராசிரியர் சாலமன்செல்வம், காமராஜ் பல்கலை பேராசிரியர் புஷ்பராஜ், விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கலைச்செல்வி, காந்தி கிராம பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன் பேசினர். 250 க்கு மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர் தேவிகாராணி தொகுத்துரைத்தார். பொருளாதார துறை பேராசிரியர்கள் அழகேசன், விஷ்ணு சுபா ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் விக்னேஸ்வரன் நன்றி கூறினர்.
நுாற்றாண்டு விழா
கொட்டாம்பட்டி: வஞ்சிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமாரி வரவேற்றார். கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், அன்பழகன், வீரமணி, ராமசாமி தலைமை வகித்தனர். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்சிநர் செல்வி முன்னிலை வகித்தார். படிப்பு மற்றும் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பாலாஜி பிரைமரி பள்ளி தாளாளர் பாலகுமரேசன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் டிவினாஷெரில் நன்றி கூறினார்.
மாணவிகளின் விழிப்புணர்வு
மதுரை: உலக வானிலை தினத்தை முன்னிட்டு மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற தங்கல் மற்றும் அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி பகுதியில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். வானிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மாணவிகள் கீர்த்தனாதேவி, கீர்த்தனா, கீர்த்தனாஸ்ரீ, கீர்த்தீஸ்வரி, கீர்த்தி, கிருபாஷினி, கோமளவள்ளி, கிருஷ்ணவேணி, லட்சுமி கணேஷ்வரி ஆகியோர் விளக்கினர். மேலும் விவசாயிகளுக்கு எருக்க இலை உரம் மூலம் தென்னைக்கு போரான் ஊட்டச்சத்து அளிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
பள்ளி ஆண்டு விழா
திருமங்கலம்: குளத்துவாய்பட்டி அரசு பள்ளி ஆண்டு விழா வட்டார கல்வி அலுவலர் சாந்தி தலைமையில் நடந்தது. உதவி ஆசிரியை வேணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் கனியம்மாள் ஆண்டறிக்கை வாசித்தார். சிவரக்கோட்டை ஊராட்சி தலைவர் செல்வராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் வைகுந்தி மலர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவரஞ்சனி மற்றும் மாணவர்கள்,மக்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் பானுப்பிரியா நன்றி கூறினார்.
ஓட்டப்போட்டி
திருமங்கலம்: பி.கே.என். வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் ஓட்டப்போட்டி நடந்தது. குழந்தைகள் அலைபேசி பயன்பாட்டை தவிர்த்து மூளை மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக எஸ்.வி.எஸ்., புட்ஸ் சுராஜ், பள்ளி நிர்வாக தலைவர் விஜய தர்ஷன், செயலாளர் அனந்த்குமார், பொருளாளர் அண்ணாமலை, முதல்வர் காருண்யா சந்திரகலா, பி.கே.என்., வித்யாசாலா சங்க கமிட்டி செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நுாற்றாண்டு விழா
பேரையூர்: கூவலபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா வட்டார கல்வி அலுவலர்கள் வடிவேல், சுப்பிரமணியன் தலைமையில் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் செல்வராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் முத்துலட்சுமி, கலைச்செல்வி தொகுத்து வழங்கினர். ஆசிரியர் சத்தியநாதன் நன்றி கூறினார்.